வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (16:33 IST)

எச்.ராஜா விளக்கத்தை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜகவின் செய்தி தொடர்பாளர் எச்.ராஜா நேற்று காலை தனது முகநூலில் பெரியார் சிலையை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்தார். பின்னர் இந்த கருத்துக்கு பயங்கர எதிர்ப்பு உண்டாகியதை தொடர்ந்து இந்த கருத்தை தான் பதிவு செய்யவில்லை என்றும் தனது அட்மின் தனக்கு தெரியாமல் பதிவு செய்துவிட்டதாகவும், இது சர்ச்சைக்குரிய பதிவு என்று தெரிந்ததும், தான் அந்த பதிவை நீக்கிவிட்டு அட்மினையும் நீக்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும் இந்த கருத்தால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்

இந்த நிலையில் எச்.ராஜாவின் வருத்தத்தையும் விளக்கத்தையும் ஏற்க முடியாது என்று கமல் உள்பட பலர் கூறினார்கள். எச்.ராஜா மன்னிப்பு கேட்கவில்லை என்றும் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எச்.ராசாவின் விளக்கத்தை ஏற்க முடியாது என்று அவரது கட்சியின் எம்பியும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது ராசா தரப்பினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சொந்த கட்சியே தனக்கு ஆதரவாக இல்லாத நிலையில் கட்சி மேலிடம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.