வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (15:31 IST)

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு பாதுகாப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் நெருங்கிய நண்பருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், ஷாருக் கானுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய காவல் துறையினர் அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். 
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் வணிக  கூட்டாளியும் நெருங்கிய நண்பருமான அலி மோரானிக்கு ரவி பூஜாரி என்பவர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
 
ரவி பூஜாரி தான் பிரபலமாக புகழ்பெற்ற பாலிவுட் பிரபலங்களை மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிரட்டப்பட்ட  மோரானி ஷாருக்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஷாருக் கானுக்கு மும்பை காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
 
இதன்படி இரண்டு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஷாருக் கானின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.