Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகை பாவனா கடத்தில் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பா? - போலீசார் விசாரணை

Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (11:41 IST)

Widgets Magazine

கேரள நடிகை பாவன கடத்தப்பட்ட வழக்கில், நடிகை காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம், படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதை மறுத்தார்.  அந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பல்சுனி சுனில், நடிகர் திலீப்பிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கு ஒன்றரை கோடி பணம் தரவில்லையெனில் உண்மையை போலீசாரிடம் கூறுவேன் என கூறியிருந்தார்.


 

 
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. எனவே, சமீபத்தில் திலீப்பிடம் போலீசார் 12 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்நிலையில், அவரின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் நடத்தும் ஆடை நிறுவனத்தில் கடந்த 1ம் தேதி போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
 
கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலின் நண்பன் ஜின்சன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் இந்த அதிரடி சோதனையை போலீசார் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 
பாவனா வழக்கில் நடிகர் திலீப்பை தொடர்ந்து, அவரது மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஏசி இல்லாமல் விமான பயணம்: ஏர் இந்தியாவில் பயணிகள் அவதி!!

டார்ஜிலிங்லில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயங்காததால் விமானப் ...

news

தலைமைச்செயலகத்தில் போலீஸ் குவிப்பு: போராட்டம் வெடிக்கும் பதற்றம்!

ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் கிராம மக்கள் சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று ...

news

முதல்வர் கனவில் தம்பிதுரை: கோபத்தில் கொங்கு மண்டலம்!

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை வெடித்துக்கொண்டு ...

news

10 நாள் மட்டும் என்னை வெளியே விடுங்கள்: போலீசாரிடம் கெஞ்சிய கைதான 'திட்டமிட்டபடி' நடிகர்

சமீபத்தில் கடலூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தை வைத்து சினிமா ...

Widgets Magazine Widgets Magazine