1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: புதன், 23 ஜூலை 2014 (18:25 IST)

காமன்வெல்த் 2014 - "நீங்கள் பெருமை சேர்ப்பீர்கள்" இந்திய வீரர்களுக்கு மோடி வாழ்த்து

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் 2014 ஜூலை 23 அன்று தொடங்கும் 20ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (20th Commonwealth Games) பங்கேற்க உள்ள இந்திய விளையாட்டு வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
 
கண்டிப்பாக நமது வீரர்கள் நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல வாய்ப்பை அளிப்பதுடன் பல்வேறு நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. 
 
நடக்க உள்ள காமன்வெல்த் 2014 போட்டியில் விளையாட்டையும் விளையாட்டு வீரர்களையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமையும்.
 
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.