வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : திங்கள், 30 ஜூன் 2014 (13:05 IST)

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 23 ராக்கெட் - மோடி வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை நேரில் கண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 9.52 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
 
பிஎஸ்எல்வி சி 23 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
பிஎஸ்எல்வி சி 23 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன் 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை காலை 8. 52 மணிக்கு துவங்கியது.
 
இன்று காலை 9.49 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ராக்கெட், பின்னர்  9.52 மணிக்கு செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.