வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (07:08 IST)

மோடியை சந்திக்கின்றனர் நேதாஜியின் குடும்பத்தினர்

பிரதமர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் உறவினர்கள் மோடியை இன்று சந்திக்க உள்ளனர்.


 
நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் மரணம் குறித்த ஆவணங்களை வெளியிடுவதில் மத்திய அரசு தொடர்ந்து கள்ள மெனம் சாதித்து வருகிறது. இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டால், வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல் எழும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது.

இதனிடையே கடந்த மாதத்தில் நேதாஜி தொடர்பான 64  ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு பொதுமக்கள் முன்பு காட்சிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எஞ்சிய ஆவணங்களை மத்திய அரசும் வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் தம்மை நேரில் சந்திக்குமாறு நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் உறவினர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மோடியை அவரது இல்லத்தில் சந்திப்பதற்காக, வெளிநாடுகளில் வசிக்கும் நேதாஜியின் உறவினர்கள் இந்தியா வந்துள்ளனர்.

மோடியுடனான இந்தச் சந்திப்பில், நேதாஜியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நேதாஜியின் உறவினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறியுள்ளார்.அதேபோல், பிரதமர் அழைப்பு விடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நேதாஜியின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.