வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (11:30 IST)

சர்வதேச யோகா தினம்: 55 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடி பயிற்சி

டோராடூனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் யோகா பயிற்சியில் 55 ஆயிரம் பேருடன் அமர்ந்து பிரதமர் மோடி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும்  சர்வதேச யோகா தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
இன்று 4-வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட பல்வேறு  நாடுகளில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
டோராடூன் நகரில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் 55 ஆயிரம் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டார். பிரதமரின் பாதுகாப்புக்காக அங்கு 3 போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இந்த அவசர யுகத்தில்  அமைதியை உணர வைக்கும் சக்தி யோகாவிற்கு உண்டு எனத் தெரிவித்தார்.