1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (04:33 IST)

சுற்றுலா தலமாக மாறுகிறது மோடி டீ விற்ற ரயில்வே ஸ்டேஷன்

பிரதமர் மோடி சிறுவயதில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து டீ விற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் டீ விற்ற கடை வாத்நகர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ளது. இந்த கடையை தற்போது சுற்றுலா ஸ்தலமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



 
 
இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா அவர்கள் கூறியபோது, 'வாத்நகர் பகுதியில் வர்த்தக வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், உலக வரைபடத்தில், வாத்நகர் ரயில்வே ஸ்டேசன் மற்றும் அப்பகுதியை இடம்பெற செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட உள்ளது. 
 
பிரதமர் டீ விற்பனை செய்த வாத்நகர் ரயில்வே ஸ்டேசன் மற்றும் அப்பகுதியை சுற்றுலாத்தலமாக்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக மத்திய சுற்றுலாத்துறை, ரயில்வே துறையுடன் இணைந்து செயல்பட உள்ளது" என்று கூறினார். டீ விற்ற ஒருவர் பிரதமர் ஆகும் அளவுக்கு உயர்ந்துள்ளதை மக்கள் அறிந்து தன்னம்பிக்கையை ஊட்டவே இந்த ஏற்பாடு என்று சுற்றுலாத்துறை கூறியுள்ளது.