1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (18:11 IST)

அக்டோபர் 13-இல் நாடு முழுவதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

அக்டோபர் 13-இல் நாடு முழுவதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் விலை நிர்ணைய முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 13-ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.


 
 
தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தினமும் விலை நிர்ணயம் செய்வதால் பல்வேறு சிக்கல்களை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்தித்து வருவதாகவும், விலை ஏற்றம் கடுமையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்தநிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த சங்கம் மும்பையில் நடத்திய ஆலோசனையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பெட்ரோலிய பொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கைவிட வேண்டும்.
 
பெட்ரோலியப் பொருட்களை நேரடியாக வீடுகளில் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிடுதல் வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியா விலையைக் கடைபிடிக்கும் விதமாக பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.