வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (21:56 IST)

ஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல் : வருகிறது புதிய சட்டம்

ஹெல்மெட் அணிந்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அளிக்க வேண்டும் என்று புதிய உத்தரவு தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் இம்மாத இறுதியில் அமுலுக்கு வருகிறது.


 

 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிச்சயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால், அதை யாரும் சரியாக பின்பற்றவில்லை. இது சம்பந்தமாக ஏராளமான வழக்குகள் அங்கு தினமும் பதிவு செய்யப்படுகின்றன.
 
இதனால், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி, ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 
 
ஹைதராபாத்தில் இம்மாத இறுதியில், இந்த சட்டம் அமுலுக்கு வருகிறது. இதற்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிலர் இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.