வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : சனி, 16 ஜனவரி 2016 (10:47 IST)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது: மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதனால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.


 
 
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்களே, 15 நாளுக்கு ஒரு முறை, நிர்ணயம் செய்து வருகின்றன.
 
இந்நிலையில் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, 13 ஆண்டுகளில் இல்லாத அளவில், பேரல் ஒன்று, 1,980 ரூபாயாக குறைந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு, 85 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
 
மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட உள்ள நிலையில், கலால் வரி உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 75 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1.83 உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரி உயர்வு காரணமாக நடப்பு நிதியாண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ.3,700 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.