வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (11:27 IST)

அப்பாவி மக்களை கொல்பவன் முஸ்லீமே அல்ல : நடிகர் அமீர்கான்

தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் அமீர்கான், அப்பாவி மக்களை கொல்பவன் ஒரு முஸ்லீமாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.


 
 
சமீபத்தில் பாரிஸ் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அது பற்றி கருத்து தெரிவித்த அமீர்கான் “இது போன்ற சம்பவங்கள் இஸ்லாம் மதம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்கு தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை இஸ்லாம் சார்ந்த நடவடிக்கையாக அவன் கருதலாம். ஆனால் ஒரு முஸ்லீமாக என்னால் இதை அப்படி கருத முடியவில்லை.   
 
அப்பாவி மக்களை கொல்லும் ஒருவன் முஸ்லீமாக இருக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னை பொறுத்த வரை அவன் ஒரு முஸ்லீமே அல்ல. அவன் தன்னை ஒரு முஸ்லீமாக நினைக்கலாம். ஆனால் நாம் அவனை ஒரு முஸ்லீமாக அங்கீகரிக்கக்கூடாது.  அவன் ஒரு தீவிரவாதி. அவனை தீவிரவாதி என்றே அங்கீகரிக்க வேண்டு. அது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று மட்டும் இல்லை. வேறு எந்த இயக்கமானாலும் சரி.
 
இன்றைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். நாளை வேறொரு இயக்கம் வரலாம். தீவிர வாத சிந்தனை என்பது என்பதும் எதிர்மறையானது. அது பேரழிவையேத் தரும்” என்று அமீர்கான் கூறினார்.