வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (16:44 IST)

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: உச்ச நீதிமன்றம்

மத்திய அரசும், மாநில அரசுகளும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.


 

 
பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. 
 
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் மற்றும் நீதிபதிகள் ஆர்.பானுமதி, யு.யு.லலித் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
 
தற்போது பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசி பரிசீலிக்க வேண்டும்.
 
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் முக்கிய உணவு பால். அதில் செயற்கை பால் பவுடர், ராசாயனம் போன்றவை கலந்து விற்பனை செய்வது உயிர் மற்றும் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
 
எனவே பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சட்டத்திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக வேண்டும். 
 
கலப்படம் செய்யப்பட்ட பால் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மத்திய அரசு நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்ய வேண்டும். பால் கலப்படத்தை எளிதில் கண்டறியும் வழி முறைகளையும் மக்களுக்கு செல்லிக் கொடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்