1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (22:31 IST)

ராம்தேவ் கம்பெனியின் சிஇஓ ஆச்சார்யா ஒரு மோசடி பேர்வழி

யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆச்சார்யா ஒரு மோசடி பேர்வழி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 
யோகா குரு என்று கூறிக்கொள்ளும், பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனத் தயாரிப்புக்கள் பலவும் தரமற்றவை என்று அண்மையில் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்தது. ராம்தேவ், மோசடி விளம்பரங்கள் மூலம் தனது நிறுவன பொருட்களை விற்று கொள்ளை அடித்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
 
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) ஆச்சார்யாவே, ஒரு போர்ஜரி என்றும், அவர் வைத்துள்ள டிகிரி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் எல்லாமே போலி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அண்மையில் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹருண் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் இடம் பிடித்திருந்தார்.
 
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான பஜாஜ் ஆட்டோ நிறுவனத் தலைவர் ராகுல் பஜாஜ், மாரிகோ தலைவர் ஹரிஷ் மரிவாலா, பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அஜய் பிரமல் ஆகியோரை விட ஆச்சார்யா இந்தப் பட்டியலின் முன் வரிசையில் இருந்தார்.
 
அதாவது ஆச்சார்யாவின் சொத்து மதிப்பு ரூ. 25 ஆயிரத்து 600 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்திய பணக்காரர்கள் வரிசையில், ஆச்சார்யா பால் கிருஷ்ணா 26-ம் இடத்தில் இருக்கிறார். பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆச்சார்யா, ஆயுர்வேதத்தில் தலைசிறந்த வல்லுநர்; சஞ்சீவி மூலிகையை மீண்டும் கண்டுபிடித்தவர் என்றெல்லாம் பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகா பீட ஆசிரமம் கூறுகிறது.
 
ஆனால் உண்மையில் சமஸ்கிருதத்தில் படித்ததாக ஆச்சார்யா காட்டும் டிகிரி சான்றிதழ் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டே போலி ஆவணங்களை கொடுத்ததாக ஆச்சார்யா மீது புகார் இருக்கிறது.
 
இது தொடர்பாக விசாரித்த சிபிஐ, ஆச்சார்யா கொடுத்த போலியான பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் அடிப்படையில்தான் அவருக்குபாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.
 
அத்துடன் ஆச்சார்யா மீதுஅந்நிய செலாவணி மோசடி வழக்கு ஒன்றும் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்ததும் கைவிடப்பட்டது என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
 
நன்றி : தீக்கதிர்