வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (09:56 IST)

சிக்கிய சந்தன கட்டைகள்: சிக்கலில் பதஞ்சலி நிறுவனம்!

பாபா ராம்தேவிற்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது சந்தன கட்டை ஏற்றுமதி சிக்கலில் இந்த நிறுவனம் சிக்கியுள்ளது. 
 
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் வனத்துறையினர் சிவப்பு நிற சந்தன கட்டைகளை ஏலத்தில் விட்டனர். சுமார் 50 டன் சிவப்பு நிற சந்தன கட்டைகளை பதஞ்சலி நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. 
 
ஆனால், இந்த சந்தனத்தை தனது நிறுவனத்திற்கு பயன்படுத்தாமல் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்துள்ளது. ஏற்றுமதிக்காக அயல்நாட்டு வர்த்தக இயக்குனரகத்திடமும் அனுமதி பெற்றுள்ளது. 
 
இதில் சிக்கல் என்னவெனில் இந்த சந்தன கட்டைகள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்திய சட்டதிட்டத்தில் இல்லை. 
 
இதனால் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் 50 டன் சந்தன கட்டைகளையும், அவற்றை ஏற்றுமதி செய்ய அயல்நாட்டு வர்த்தக ஏற்றுமதி இயக்குனரகம் அளித்த அனுமதியையும் பறிமுதல் செய்தது.
 
இந்நிலையில், கைப்பற்றிய சந்தன கட்டைகளை விடுவிக்குமாறு பதஞ்சலி நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.