வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2016 (23:12 IST)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்: வெங்கய்ய நாயுடு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்: வெங்கய்ய நாயுடு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று தொடங்குகிறது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
 

 
பட்ஜெட் கூட்டத் தொடர் தேதியை முடிவு செய்ய  நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று கூடியது.
 
இந்த கூட்டம் குறித்து, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது 
 
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23 ஆம் தொடங்குகிறது.
 
இதில், முதல் பகுதி பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாவது பகுதி ஏப்ரல் 25 ஆம்  தொடங்கி மே 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 
பிப்ரவரி 25 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், பிப்ரவரி 26 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், பிப்ரவரி 29 ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்றார்.