வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (01:34 IST)

இந்திய எல்லை மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - இந்திய வீரர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
 

 
இந்த சம்பவம் குறித்து, பூஞ்ச் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில்,  பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கோடு அருகே, புதன்கிழமை அன்று இரவுநேரப்  பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர் ரச்பால் சிங் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், படுகாயம் அடைந்த ரச்பால் சிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்றார்.
 
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு - காஷ்மீரில் இதே போன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்து குறிப்பிடதக்கது.