வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (14:21 IST)

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
பூஞ்ச் மாவட்டம் ஹமீர்பூர் பிரிவில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. நேற்றிரவு 9 மணி அளவில் தானியங்கி துப்பாக்கிகளால் தாக்கியதுடன் குண்டுகளையும் வீசி உள்ளது. பாகிஸ்தான் இராணுவத்துக்கு இந்திய படையினர் உரிய பதிலடி கொடுத்ததாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்பு எதும் இல்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 3 நாட்களில் பாகிஸ்தான் இராணுவம் 3 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இம்மாதம் 1 தேதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்,  94 பேர் காயம் அடைந்தனர். இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது. 113 கிராமங்களை சேர்ந்த 30,000 மேற்பட்ட மக்கள் அங்கியிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.