காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் ஒருவர் காயம்!

Last Modified வெள்ளி, 1 மார்ச் 2019 (09:41 IST)
ஒருபக்கம் அபிநந்தனை விடுதலை செய்வதோடு, சண்டை வேண்டாம், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்து கொள்வோம் என்று கூறி வரும் பாகிஸ்தான் இன்னொரு புறம் காஷ்மீர் உள்பட இந்தியாவின் சில பகுதிகளில் அத்துமீறி தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி என்ற பகுதியில் 4 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் இந்த ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன
இந்த நிலையில் காஷ்மீர் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை வேண்டாம், சமாதானம் மட்டுமே தேவை என சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதல் சமாதானத்தை குலைக்கும் வகையில் உள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :