1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (13:27 IST)

பாகிஸ்தான் தவறான பாதையில் செல்கிறது: ஜம்மு - காஷ்மீர் அரசு

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் பாகிஸ்தான் தவறான பாதையில் செல்வதாக ஜம்மு காஷ்மீர் துணை முதல் அமைச்சர் நிர்மல் சிங் தெரிவித்துள்ளார்.


 
 
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்றது.
 
இதில் அம்மாநில துணை முதல் அமைச்சர் நிர்மல்சிங்கும் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், " தீவிரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் பாகிஸ்தான் தவறான பாதையில் செல்கிறது.தாங்கள் ஊக்குவிக்கும் தீவிரவாதம் தங்களையே தாக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்".

எல்லை தாண்டி இந்திய மண்ணுக்குள் தீவிரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான், தங்களது கைகளை கழுவிக் கொண்டு தாங்கள் தவறிழைக்கவில்லை என்று எண்ணிக் கொள்கிறது. தீவிரவாதம் என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் அல்ல, மனித இனத்துக்கே எதிரானது என்று அவர்கள் (பாகிஸ்தான்) புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் மீது சளைக்காமல் தாக்குதல்களை தொடுக்கும் பாகிஸ்தான் சில நேரங்களில் வெற்றி பெறுகிறது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.