1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N .Vadivel
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2016 (07:00 IST)

பாலியல் புகார்: கட்டாய விடுப்பில் அனுப்பட்ட பச்சோரி

பாலியல் புகார்: கட்டாய விடுப்பில் அனுப்பட்ட பச்சோரி

பாலியல் புகாரில்சிக்கிய பச்சோரியை கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டார்.
 

 
டெல்லியில் தி எனர்ஜி ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக  சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி இருந்தார்.
 
இவர் மீது பெண் ஊழியர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பாலியல் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீாசார் வழக்கு பதிவு செய்தனர். பின்பு ஜாமினில் வெளியே வந்தார். இதனால், ஆர்.கே.பச்சோரி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில், அஜய் மாத்தூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
டெர்ரி ஆட்சிக் குழு கூட்டத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட, டெர்ரி துணைத் தலைவர் பதவியில் ஆர்.கே.பச்சோரியை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், பச்சோரியை பதவி நீக்கம் செய்யக் கோரி  தெரி நிறுவன பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தெரி ஆட்சி மன்றக்குழு கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. அப்போது, வெளியிடப்பட்ட அறிக்கையில், அசோக் சாவ்லாவை தெரியின் தலைவராக வரவேற்கிறோம் என்றும், புதிய தலைமை இயக்குனர் அஜய் மாத்தூரை ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக கவுன்சில் நியமித்துள்ளது. அவர் முழு அதிகாரத்துடன் செயல்படுவார் என்றும் தெரவித்துள்ளது.
 
இதனையடுத்து, பச்சோரி கட்டாய விடுமுறையில் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.