ஓவியா நடிக்கவில்லை ; அவருக்கு எப்போதும் ஒரே முகம்தான் - தந்தை பேட்டி


Murugan| Last Updated: சனி, 5 ஆகஸ்ட் 2017 (17:04 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகை ஓவியா குறித்து அவரது தந்தை நெல்சன் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

 
தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், தீவிர மன அழுத்தத்தில் இருந்த நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது போல் நேற்றைய நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. அதன் பின் அவரை அங்கிருந்து வெளியேற்றி ஒரு தனியார் மருத்துவமனையில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.  
 
அதன் பின் அவரை மீண்டும் நிகழ்ச்சியில் பங்கு பெறவைக்க, விஜய் தொலைக்காட்சி அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது எனவும், ஆனால், அதில் விருப்பமில்லாத ஓவியா, கமல்ஹாசனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, தனது சொந்த ஊரான கொச்சினுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில், ஓவியாவின் தந்தை நெல்சன் சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் ஓவியாவை பற்றி கூறிய போது “ அவர் எப்போதும் தன்னம்பிக்கை நிறைந்தவர். அவசர கதியில் யாரிடமும் காதலில் விழும் நபர் அல்ல. அவர் நடிக்கவில்லை. அவருக்கு எப்போதும் ஒரே முகம்தான். முன்யோசனை இன்றி ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் நபர் அல்ல. அவரை பற்றி எல்லோரும் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால், எதையும் நம்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :