1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (05:51 IST)

கர்நாடகாவில் வாங்கிய கடனை கொடுக்க முடியாத விரக்தியில் 3 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவைத் தொடர்ந்துகர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
 

 
கர்நாடாக மாநிலத்தின் மாண்டியா, மைசூரு மற்றும் ஹசன் மாவட்டங்களில்தான் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில், மைசூரு மாவட்டம், பெட்டடபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயது கரிகௌடா என்ற விவசாயி, தான் கடன் வாங்கிய 3 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தினால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 
 
அதே போன்று, மாண்டியா மாவட்டம், ஹிரிகலாலே கிராமத்தை சேர்ந்த 45 வயது சங்கரகவுடா, ஒரு லட் ரூபாய் கடன் வாங்கி, கிணறு தோண்டியுள்ளார். ஆனால், அதில் தண்ணீர் வரவில்லை என்பதால், அந்த வேதனையில், தற்கொலை செய்து கொண்டார்.
 
அடுத்து, ஹசன் மாவட்டம், சென்னராயப்பட்னா பகுதியைச் சேர்ந்த 66 வயது கிருஷ்ணப்பா, தான் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்.
 
கடந்த 3 வருடத்தில் மட்டும் சுமார் 3000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால், அம்மாநில விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில், விவசாயிகள் தற்கொலை சம்பவங்களை, அரசு உடனே தடுக்க முன்வர வேண்டும் என எதிர் கட்சிகள் குரல் கொடுத்துள்ளது.