1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 13 ஜனவரி 2016 (23:11 IST)

உம்மன் சாண்டி நேரில் ஆஜராக விசாரணை கமிஷன் உத்தரவு

கேரளாவில், சோலார் பேனல் மோசடி வழக்கில் ஜனவரி 25 ஆம் தேதி அந்த  மாநில முதல்வர் உம்மன்சாண்டி நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
 

 
கேரளாவில், சோலார் பேனல் மோசடி புகார் தொடர்பாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரத்தில் முதல்வர் உம்மன்சாண்டிக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறினர். மேலும் சரிதா நாயரின் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்த போது, இதில், முதல்வர் உம்மன் சாண்டிக்கும் பங்கு உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்த நிலையில், முதல்வர் உம்மன் சாண்டியும் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்று விசாரணை கமிஷன் நீதிபதி சிவராஜ் உத்தரவிட்டுள்ளார்.