1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 22 ஜூலை 2014 (18:58 IST)

'ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்' கொள்கை - மத்திய அரசு ஏற்பு

இராணுவப் படையினருக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் (one rank, one pension for military personnel) கொள்கையை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 
 
இந்தியாவில் முப்படைகளிலும் பல்வேறு உள் பிரிவுகள் உள்ளன. ஒரு படையின் பிரிவில் உள்ள பதவி, மற்றொரு படையின் அதே பிரிவில் சம அளவிலான பதவியாகக் கருதப்பட இத்திட்டம் வழி செய்கிறது. அதேபோல், அதிகாரிகளின் ஓய்வுக்குப் பின்னர் எந்தப் படையைச் சேர்ந்தவர் என்றில்லாமல் அனைத்துப் படைப் பிரிவினருக்கும் வேறுபாடின்றி சம விகித ஓய்வூதியம் வழங்கப்படும்.
 
இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதன் வழிமுறைகள் குறித்துப் பல்வேறு துறையினருடன் மத்திய அரசு விவாதித்துள்ளது. இது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. 
 
இதன் வழிமுறைகள் அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட பின், இந்தக் கொள்கை செயல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் (Rao Inderjit Singh) மாநிலங்கள் அவையில் தெரிவித்தார்.