வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (10:24 IST)

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் நரேந்திர மோடி

நிலநடுக்கத்தால் இந்தியாவின் வட மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருமாத சம்பளத்தை வழங்கினார். 
 
கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவானது. இந்த மோசமான நில நடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கத்தால், வட மாநிலங்களில் 72 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றது.
 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது ஒரு மாத சம்பளத்தை, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்கியுள்ளார்.
 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே தங்களின் ஒரு மாத ஊதியத்தை, நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இந்த நில நடுக்கத்திற்கு நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.