வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 மே 2016 (20:16 IST)

கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு : திருப்பதியில் 1 லட்சம் பேர் தரிசனம்

கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால், நேற்று ஒரு நாளில் மட்டும் திருப்பதியில் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.


 

 
பொதுவாக திருப்பதியில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். கோடை விடுமுறை என்றால் சொல்லவே தேவையில்லை. வழக்கம்போல், இந்த கோடை விடுமுறையிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
 
நேற்று கடைசி ஞாயிறு என்பதால், அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும், தெலுங்கு தேச கட்சி மாநாட்டிற்கு வந்த கட்சி தொண்டர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நேற்று அங்கு குவிந்ததால் கூட்டம் நிரம்பியது.
 
நேற்று ஒரு நாள் மட்டும், ஒரு லட்சம் பேர் வரை ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.