வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (19:40 IST)

27-ம் தேதி அப்துல் கலாம் மணிமண்டபத்திற்கான அடிக்கல்

27-ம் தேதி அப்துல் கலாம் மணிமண்டபத்திற்கான அடிக்கல்

அப்துல் கலாமின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிக்கு வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என மத்திய மந்திரி பாரிக்கர் உறுதி அளித்துள்ளார்.


 


மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அவரது நினைவிடம் ராமேசுவரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது. ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், அவரின் நினைவிடம் பராமரிப்பின்றி இருக்கிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கலாம் நினைவிடம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், கலாம் நினைவிடம் பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதை அடுத்து, பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் இதுபற்றி கூறுகையில், “கலாம் நினைவிடம் கட்ட மத்திய அரசு தரப்பில் 5 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு 1.8 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தி தந்துள்ளது. கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன், வரும் 27-ம் தேதி மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிச்சயம் நடக்கும்.” என்றார்.

அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில் நினைவிடம் அருகிலேயே அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.