1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 24 அக்டோபர் 2014 (13:39 IST)

கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஒடிசா மாநில பாஜக துணைத் தலைவர் அசோக் சாஹு

ஒடிசா மாநில பாஜக துணைத் தலைவர் அசோக் சாஹுவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான உத்தரவை அம்மாநில பாஜக தலைவரான கே.வி. சிங்டியோ பிறப்பித்துள்ளார்.
 
கட்சி கட்டுப்பாட்டை மீறி தனது கருத்தை ஊடகங்கள் மற்றும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
ஒரு வாரத்திற்குள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து சாஹு கூறுகையில், “கட்சியின் மத்திய தலைமையிடம் சிங்டியோவின் போக்கு குறித்து தான் முறையிட்டுள்ளதாக கூறியுள்ளார். சிங்டியோ பாலாங்கிர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், அதற்காக நான் அவருக்கு வேலைக்காரனாக இருக்கமுடியாது“ என்று சாஹு கூறியுள்ளார்.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கந்தமால் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சாஹுவிற்கு தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.
 
ஒடிசா மாநிலத்தின் கந்தமால் நொடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் முடிந்து நான்கு நாட்களே ஆன நிலையில், அம்மாநில பாஜக துணை தலைவர் அசோக் சாஹு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.