வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 மார்ச் 2018 (12:02 IST)

மேகாலயாவில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சி: முதல்வர் பதவியேற்பு

மேகாலயா மாநிலத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி செய்யும் நிலையில் அங்கு 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சியாக மாறுகிறது.
 
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் மேகலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளையும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மேலும் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும், சிறிய கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன.
 
இந்த நிலையில் இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, தேசிய மக்கள் கட்சி மற்றும் சிறிய கட்சிகளின் உதவியுடன் இன்று ஆட்சி அமைத்தது. முதல்வராக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு மேகாலையா ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.