Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐம்பதே வினாடிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? இதோ ஒரு வழி


sivalingam| Last Modified திங்கள், 17 ஏப்ரல் 2017 (21:46 IST)
முன்பெல்லாம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது சிம்மசொப்பனமாக இருக்கும். அந்த இணையதளம் மிகவும் மெதுவாக செயல்பட்டதால் பலர் பொறுமை இழந்தது அனைவரும் அறிந்ததே.


 


ஆனால் தற்போது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஓரளவுக்கு வேகமாக இருப்பதுடன் முன்பதிவு செய்ய தற்போது செயலியும் வந்துவிட்டது. இந்த நிலையில் தட்கல் மூலம் முன்பதிவு செய்வதற்கு என்றே ஐ.ஆர்.சி.டி.சி  ரயில் கனெக்ட் என்ற தனி செயலி கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

முதலில் குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளுக்கு மட்டுமே இந்த செயலியின் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைகளுக்கும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த செயலி மூலம் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய வெறும் ஐம்பது வினாடிகள் போதும் என்பது ஒரு கூடுதல் சிறப்பு. பேடிஎம் மற்றும் இண்டர்நெட் ஆப்சன்களில் இருந்து ரயில் கட்டணங்களை செலுத்தும் வசதியும் இந்த செயலியில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :