வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (20:48 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலின் "கார் இல்லாத நாள்” தினம் : அனுமதி மறுப்பு

வரும் அக்டோபர் 22 ஆம் தேதி டெல்லியில் கார் இல்லாத நாள் (கார் ஃப்ரி டே) கடைபிடிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.


 
 
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையிலும், பொது போக்குவரத்து வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும், அரியானாவில் கடைபிடிக்கப்படுவதை போல், தலைநகர் டெல்லியிலேயும், வருகிற அக்.22 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில், அக்.22 ஆம் தேதி அன்று தசரா பண்டிகை கொண்டாட இருப்பதால், இந்த விழாவை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் அக்.22 ஆம் தேதி தவிர்த்து வேறு எதாவது தேதியில் இந்த நாளை கொண்டாடுவதற்கு டெல்லி காவல்துறை முழு ஆதரவு அளிக்கிறது என்றும் அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே கெஜ்ரிவால் அரசுக்கும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல் துறைக்கும் பல்வேறு பிரச்சனைகளில் மோதல் நிலவி வரும் நிலையில், இந்த சம்பவம் புதிய மோதலை ஏற்படுத்தியுள்ளது.