செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (19:03 IST)

முஸ்லிம்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கக்கூடாது - சுப்பிரமணிய சாமி

முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் எவ்வித சலுகையும் அளிக்கக்கூடாது என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
 
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முஸ்லிம்களுக்கு கல்வியில் வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இட ஒதுக்கீட்டை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்திருக்கிறது. மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவை நான் வெகுவாக வரவேற்கிறேன்.
 
இந்திய அரசியல் சாசனத்தை தெளிவாக ஆராய்ந்தால், மத அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்பது தெரியும். மேலும், முஸ்லிம்கள் இந்தியாவில் 800 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியுள்ளனர்.
 
8 நூற்றாண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்களை சமூகத்தில் சிறுபான்மையினராகவோ அல்லது சமூகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவோ கோருவதில் நியாயமில்லை. எனவே முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் எவ்வித சலுகையும் அளிக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.