வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 22 ஜனவரி 2015 (17:28 IST)

'மத்தியில் நடப்பது ராம பக்தர்களின் ஆட்சி': நிதின் கட்கரி சர்ச்சை பேச்சு

மத்தியில் நடப்பது ராம பக்தர்களின் ஆட்சி என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அயோத்தி முதல் நேபாளத்தின் ஜனாக்பூர் வரையிலான ராம்-ஜன்கி-மாக் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்தும் திட்டம், இன்னும் நான்கு மாதங்களில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
 
மத்தியில் நடப்பது ராம பக்தர்களின் ஆட்சி என்று கூறிய அவர், ஆட்சியில் உள்ளவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை ஆர்ப்பரிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
 
தமிழகத்தில் சேது கால்வாய் திட்டத்திற்காக, ஆதாம் பாலம் எனப்படும் ராமர் சேது பாலம் அழிக்கப்படாது என்றும் நிதின் கட்கரி கூறினார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.