வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2016 (10:53 IST)

மிரட்டலுக்கு பின் பணிந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் - ரூ.4.75 கோடி இழப்பீடு செலுத்தப்பட்டது

பசுமைத் தீர்ப்பாயம் விதித்த 4.75 கோடி இழப்பீட்டை வேறு வழியில்லாமல், கார்ப்பரேட் சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு செலுத்தியது.
 

 
உலக கலாச்சார விழா என்றபெயரில் வாழும் கலை அமைப்பு, யமுனை நதிக்கரையில் மிகபிரம்மாண்டமாக ஒரு நிகழ்ச்சி யினை நடத்தியது. கடந்த மார்ச் 11 முதல் 13 வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்று, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
 
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளுக்காக யமுனை நதிக்கரையின் மீதும் அதன் நீர்பரப்பு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதோடு பல நூற்றுக்கணக்கான விவசாயி களின் விளைநிலங்களும் அபகரிக்கப் பட்டன. அப்பகுதியில் நிறைந்திருந்த மரங்கள், காடுகள், பல்லுயிரினங்கள் முழுவதும் அழிக்கப்பட்டன.
 
இப்பணியில் இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டதும் பெரும் சர்ச்சையாக மாறியது. சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு ஆதரவாக அரசு எந்திரம் இயங்கியது என்பதும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடுமையாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இயற்கையின் சமநிலை அழிக்கப்பட்டுள்ளது; பல்லுயிரினங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று பல்வேறு ஆய்வு மதிப்பீடுகள் வெளிவந்தன.
 
இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் மார்ச் மாதம் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பே ரூ.5 கோடி சுற்றுச்சூழல் இழப்பீட்டை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பசுமைத் தீர்ப்பாயம் விதித்தது.
 
நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பே இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டுமென பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ஏற்காமல் நான் சிறைக் கூட செல்ல தயாராக உள்ளேன்; இழப்பீட்டை நான் செலுத்தமாட்டேன்; இது உலககலாச்சார ஒலிம்பிக் என்று ரவிசங்கர் கூறியிருந்தார்.
 
இழப்பீட்டை செலுத்தாத வாழும் கலை அமைப்பு மீது பல்வேறு விமர்சனங்கள் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் ஏற்கெனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி மீதமுள்ள ரூ. 4.75 கோடிக்கான வரைவோலையை புதுடெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநரின் பெயரில் இழப்பீட்டை வாழும் கலை அமைப்பு செலுத்தியுள்ளது.