செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 28 மார்ச் 2015 (14:08 IST)

இப்படியும் ஒரு மனிதனா? கொளுத்தும் வெயிலில் சிமெண்ட் குழைக்கும் நியூசிலாந்துகாரர்

நியூசிலாந்தில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா வந்தவர், இப்போது கொளுத்தும் வெயிலில் சிமெண்டு குழைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
 
நாளை உலகக்கோப்பைப் போட்டி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. நமது நாட்டுக்காரர்கள் சாதாரணப் போட்டிக்கே ஒவ்வொரு நாட்டுக்கும் பறப்போம். வேலை இருந்தாலும், பள்ளி, கல்லூரி எதுவாக இருந்தாலும் விடுப்பு எடுத்து கிரிக்கெட் பார்ப்போம். ஆனால் நியூசிலாந்துக்காரர் இங்கு வந்து சிமெண்ட் குழைக்கிறார்.
 
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் பி.இ. சிவில் என்ஜினீயர். இவர் மைசூருவுக்கு சுற்றுலா நிமித்தமாக வந்துள்ளார். இந்நிலையில், பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவருக்கு, அங்கு மக்கள் வியர்வை சிந்தி கஷ்டப்படுவதைப் பார்த்துள்ளார்.
 
இது அவருடைய மனதில் ஒருவிதமான எண்ணத்தை விதைத்துள்ளது. எனவே, தானும் தொழிலாளர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். அப்போது சாலைகளில் நடைபாதை அமைக்கும் பணி நடந்துள்ளது.
 
அந்த பணியில் அவரும் இணைந்து தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கூலி தொழிலாளிகளுடன் சேர்ந்து சிமெண்டு கலவை போடுவது, அந்த கலவையை தலையில் சுமந்து செல்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்.
 
இதில் முக்கியமான விசயம் என்னவெனில், அவர், தான் செய்யும் வேலைக்கு கூலி வாங்குவது கிடையாது. அதற்கு நேர் மாறாக, தன்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளிகளுக்கு காபி, டீ வாங்கிக் கொடுத்து வருகிறார்.