பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் தேவையில்லை


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (20:27 IST)
பாஸ்போர்ட் பெறுவதற்கு தற்போது புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் தேவையில்லை என்று வெளிவுறத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

 
பாஸ்போர்ட் பெறுவதற்கு பல விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பாஸ்போர்ட் பெற முகவரி, புகைப்படம் அடையாளம் மற்றும் ஏதேனும் ஒரு அத்தாட்சி வழங்க வேண்டும். பின்னர் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதுவும் 1989 ஆம் மற்றும் அதன்பின் பிறந்தவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.
 
தற்போது அந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை. அதற்கு பதிலாக ஆதார் அட்டை சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :