செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (16:31 IST)

ஆணவ படுகொலையை தடுக்க புதிய சட்டம் : மத்திய அரசு தகவல்

ஆணவ படுகொலையை தடுக்க புதிய சட்டம் : மத்திய அரசு தகவல்

சாதி மற்றும் மதம் காரணமாக நிகழ்த்தப்படும் ஆணவ கொலைகளை தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை விரைவில் அமுல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.


 

 
சமீப காலமாக இந்தியாவில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம் இதில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இச்சம்பவங்கள் நடக்கிறது. கடந்த சில வருடங்களில் தமிழகத்தில் மட்டும் ஏராளமான ஆணவ படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இதை தடுக்க சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும், கலப்பு திருமனம் செய்து கொள்பவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார். 
 
இந்த மனுவின் மீதான விசாரணையின் போது, ஆணவ கொலைகளை தடுக்கும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அரசின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
எனவே விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.