வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 3 நவம்பர் 2014 (15:59 IST)

டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை என்று ஆளுநரிடன் கூறியது பாஜக

டெல்லி ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்த பாஜகவினர், டெல்லியில் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.
 
பாஜக தலைவர் சதீத் உபத்யாய், ஜெகதீஷ் முக்தர் ஆகியோர் டெல்லி ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்தனர். அப்போது டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்று அவர்கள் ஆளுநரிடம் தெரிவித்ததாகக் கூறுப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை ஆளுநர் சந்திக்க உள்ளார். அவர்களின் கருத்துக்குப் பின்னர் டெல்லி சட்டசபையை கலைக்கும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்ட சபைக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
 
பாஜக அதிகபட்சமாக 31 இடங்களை கைப்பற்றியது. 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, 8 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கெஜ்ரிவால் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
 
இந்நிலையில் காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 49 நாட்களுக்குப் பிறகு கெஜ்ரிவால் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதை தொடர்ந்து பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.