Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விமான நிலையங்களில் தொடர்ந்து சிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:25 IST)
ரூ.53.78 லட்சம் மதிப்பிலான புதிய நோட்டுக்கள் மற்றும் ரூ.4.29 லட்சம் பழைய ரூபாய் நோட்டுக்களை டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

 
 
ரூபாய் நோட்டுக்கள் மீது தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 
 
இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
 
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் ரூ.53.78 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ரூ.4.29 லட்சம் பழைய ரூபாய் நோட்டுக்களும் இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்து, அந்த நபரை கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :