வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 16 டிசம்பர் 2014 (15:13 IST)

ஆங்கிலேயரிடம் ஒப்படைக்காவிட்டால் நேதாஜியை உயிருடன் ஆஜர்படுத்த தயார் - உயர்நீதிமன்றத்தில் மனு

நேதாஜியை போர் குற்றவாளியாக அறிவித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்தால், நேதாஜியை ஆஜர்படுத்த தயாராக உள்ளோம் என  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மௌ ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முக்கியமானவர். அவரது மரணம் குறித்த மர்மங்கள் இன்னும்  நீடிக்கிறது. அவரது மரணம் குறித்த மர்மத்தை வெளியிட மத்திய  அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
 
மனுவை விசாரித்த நீதிபதி, மனு குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரதிய சுபாஷ் சேனா சார்பில் முந்தைய  மனுவிற்கு ஆதரவாக மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில், ”1962ஆம் ஆண்டு நடந்த சீன போர் மற்றும் 1964ஆம் ஆண்டில் நேரு இறுதி ஊர்வலம் ஆகியவற்றில் நேதாஜி இருந்துள்ளார். நேதாஜி இறந்துவிட்டதாக அறிவிக்கக் கூடாது என 04.08.1997இல் அலஹாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பி வரும் போது போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.
 

 
நேதாஜி ஒரு போர் குற்றவாளி எனவும், அவர் கண்டுபிடிக்கப்பட்டால்  ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் நேரு ஒரு கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார். நேதாஜி ஒரு பிரம்மச்சாரி. அவருக்கு குழந்தைகள் கிடையாது. நேதாஜியின் வாரிசு என கூறப்படும் அனிதா போஸ் இந்திய தேசிய காங்கிரசால் உருவாக்கப்பட்டவர். அவர் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாரா?
 
மேலும் அடுத்தப் பக்கம்...

மேற்கு வங்கத்தில் உள்ள சவுல்மாரி ஆசிரமத்தில் நேதாஜி சாதுவாக இருக்கிறார் என்ற தகவலையடுத்து 1963, 1964ஆம் ஆண்டுகளில் மத்திய அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டுள்ளார். நேதாஜியை பலமுறை சந்தித்துள்ளதாக முத்துராமலிங்கத் தேவர் கூறியுள்ளார்.
 

 
தற்போதும் அவர் உயிருடன் உள்ளார். நேதாஜியை போர் குற்றவாளியாக அறிவித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்தால், பாரதிய சுபாஷ் சேனா அமைப்பின் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங் அனுமதியுடன் ஐகோர்ட்டில் நேதாஜியை ஆஜர்படுத்தத் தயாராக உள்ளோம்.
 
நீதிமன்றத்தில் அதற்குரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவும் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.