Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காரில் வைத்து இளம்பெண்ணை கற்பழித்த நான்கு பேர் : கொல்கத்தாவில் அதிர்ச்சி


Murugan| Last Modified செவ்வாய், 31 மே 2016 (15:42 IST)
நேபாள நாட்டைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் கொல்கத்தாவில் சில வருடங்களாக வசித்து வருகிறார். அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு, தன்னுடைய ஆண் நண்பரை சந்திக்க, ஒரு காபி ஷாப்பிற்கு செல்வதற்காக ஒரு கால் டாக்சியில் ஏறியுள்ளார்.

 

 
ஆனால், அந்த கார் டிரைவர், அந்த பெண்ணை வேறொரு இடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். வழி தெரியாமல் முழித்த அந்த பெண், அருகிலிருந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் வழி கேட்டுள்ளார். 
 
தனக்கு வழி தெரியாது என்று கூறிய அந்த வாலிபர், தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்துள்ளார். அதன்பின் அவரது நண்பர்கள் மூன்று பேர் காரில் வந்துள்ளனர். அந்த பெண் செல்ல வேண்டிய காபி ஷாப்பிற்கு அவரை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர்.
 
அதனை நம்பி அந்த பெண்ணும் காரில் ஏறியுள்ளார். அதன்பின் அவர்கள் நான்கு பேரும் அந்த பெண்ணை ஓடும் காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பி, அதிகாலை 3 அணியளவில் சாலையோரம்  அந்த பெண்ணை வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
 
சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த அவரைக் கண்ட ரோந்து போலீஸ்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தப்பிச் சென்ற அந்த நான்கு வாலிபர்களை அவர்கள் தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :