வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2015 (19:47 IST)

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 160 இடங்களில் போட்டி - மாஞ்சிக்கு 20 தொகுதி

பீகார் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 


 

 
பீகார் தேர்தலில் நிதிஷ் குமார், லல்லு, காங்கிரஸ் என வலுவான கூட்டணிக்கு எதிராக பா.ஜனதாவும் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது.
 
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, பீகார் தேர்தலில் தங்களது கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூக முடிவு எட்டப்பட்டதாக அறிவித்தார்.
 
பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களிலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி 40 இடங்களிலும், ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 20 இடங்களிலும், உபேந்திரா குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 23 இடங்களிலும் போட்டியிடும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாரதிய ஜனதா தலைமையுடன்  ஜித்தன் ராம் மாஞ்சி கட்சிக்கு ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம்12ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மேலும், நவம்பர் 8–ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.