வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (06:02 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி

டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்த நாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்த நாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மேலும், மோடி தனது டிவிட்டர் பதிவில், டெல்லி முதல்வர் ஸ்ரீ அரவிந்த் கெஜ்ரிவால், நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மோடியின் வாழ்த்துச் செய்தியில் குளிர்ந்து போன கெஜ்ரிவால், மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

டெல்லி அரசியலில் பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் அரசியலில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு மோடியின் வாழ்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கும், அவரது கட்சி  தொண்டர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.