வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.n.Vadivel
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (03:04 IST)

இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியுன் பேசும் 9 ஆம் வகுப்பு மாணவி விசாலினி

நெல்லை 9 ஆம் வகுப்பு மாணவி விசாலினி இன்று காலை 11 மணிக்கு, பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகிறார்.
 

 
திருநெல்வேலி மாவட்டம், நீதிமன்றம் அருகே உள்ளது சங்கர் நகரக். இங்கு வசிக்கும் கல்யாணகுமாரசாமி - சேதுராகமாலிகா தம்பதிகளின் மகள் விசாலினி(15).
 
நெல்லை, லட்சுமிராமன் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், கம்ப்யூட்டர் துறையில், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் சி.சி.என்.ஏ., மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., சி.சி.எஸ்.ஏ. போன்ற கடினமான தேர்வுகளைக் கூட மிக எளிதாக எழுதி வெற்றி பெற்றார். இதனால், சிறுவயதிலேயே கம்ப்யூட்டர் துறையில் சாதனை படைத்தார்.
 
இதனைப் பாராட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பிடெக் முதலாம் ஆண்டில் பயில விசாலினிக்கு அனுமதி வழங்கினர்.
 
மேலும், டெல்லியில் நடைபெற்ற கூகுள் கல்வியாளர் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்கேற்றார்.
 
இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று 4ஆம் தேதி, காலை 11 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுடன் டெல்லியில் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். அப்போது, மாணவி விசாலினியுடன் பேசுகின்றார். விசாலினிக்கு மோடி பாராட்டு தெரிக்க உள்ளார்.