1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2014 (17:44 IST)

மோடியின் வாரணாசித் தொகுதியில் 3 லட்சத்திற்கும் மேல் போலி வாக்காளர்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வென்றதாகக் கூறப்படும் வாரணாசித் தொகுதியில் 3 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

வாரணாசி தொகுதியில் தற்போது வாக்காளர் சரிபாக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாரணாசியில் மொத்தமுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 8 தொகுதியில் வாக்காளர் சரிபார்க்கும் பணி முடிவடைந்துள்ளது.

சரிபார்க்கப்பட்ட 8 தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியல்களில் 3,11,573 (மூன்று லட்சத்து பதினோராயிரத்து ஐநூற்றி எழுபத்தி மூன்று) வாக்காளர்கள் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.

வாரணாசியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இதுவரை சரிபார்க்கப்பட்ட 5 லட்சம் வாக்காளர்களில் முக்கால்வாசி போலி வாக்காளர்கள் என தெரியவந்தது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடந்து நடந்துகொண்டு இருக்கிறது.

போலி வாக்காளர் பட்டியல் குறித்துப் பேசிய மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், ’’அதிக இடங்களில் முழுப் பட்டியலுமே போலி வாக்காளர் பட்டியலாக உள்ளது. பட்டியல் சரிபார்க்கும் பணியில் தொடர்ந்து போலி வாக்களர் பட்டியல் தான் வந்துகொண்டே இருக்கிறது. இன்னும் பல்வேறு இடங்களில் இந்தப்பணி நடந்து வருகிறது.

பட்டியலில் பலர் ஒரே பெயரை 4 முதல் 4 இடங்களில் பதிவு செய்து வைத்துள்ளனர். இது கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பாக நடந்துள்ளது. இதன்படி வாரணாசி மொத்த வாக்காளர்களில் 6 முதல் 8 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்களாக இருக்ககூடும் என்று தெரிகிறது, சரிபாக்கும் பணி தொடந்து நடைபெறுகிறது’’ என்றார்.

போலி வாக்காளர் பட்டியலில் குறித்த விவகாரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.