வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (15:19 IST)

மத்திய பட்ஜெட்: பாசன வசதிகளை மேம்படுத்த : ரூ1000 கோடி ஒதுக்கீடு

பாசன வசதிகளை மேம்படுத்த ரூ1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

2014 -2015 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெடை தாக்கல் செய்து உரையாறினார்.

பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 100 நவீன நகரங்கள் உருவாக்கப்படும். அடுத்த 3 மாதங்களில் 6 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றார் நிதியமைச்சர்.

தொழிற்துறையுடன் அடிக்கடி ஆலோசனை நடத்த தனிக்குழு அமைக்கப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு 33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சர்தார் வல்லப்பாய் படேல் சிலை நிறுவ நிதி ஒதுக்கீடு, 20 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் லக்னோ, அகமதாபாத்,  மெட்ரோ திட்டம் துவங்கப்படும். இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களில் மின் வசதியை ஏற்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்க்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுத்தமான இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி உறுதிப்படுத்தப்படும். தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு 8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 12 புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்கப்படும்.

மின்னணு விசா வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அளித்து மேலும் பொறுப்பு தனமை அதிகரிக்க வழிவகை செய்யப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.