வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 மே 2019 (21:12 IST)

தேர்தலுக்கு மறுநாளே நிறுத்தப்பட்ட நமோ சேனல்: என்ன ஆச்சு?

தேர்தல் நேரத்தில் பாஜகவும், பிரதமர் மோடியும் சந்தித்த சர்ச்சைகளில் ஒன்று 'நமோ' சேனல். இந்த சேனல் கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தொடங்கப்பட்டது. இதனால் இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரணை செய்த தேர்தல் ஆணையம், 'அரசியல் தொடர்பான செய்திகளை இந்த சேனல் வெளியிடக்கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தது
 
எனினும் இந்த சேனலில் கடந்த ஒரு மாதமாக பிரதமர் மோடியின் பயணம், பாஜக அரசின் திட்டம் ஆகியவை ஒளிபரப்பப்பட்டே வந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தும் உருப்படியான நடவடிக்கை இல்லை
 
இந்த நிலையில் நேற்றுடன் மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று நமோ சேனல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த 24 மணி நேரத்திற்குள் இந்த சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அப்படியானால் இந்த சேனல் தேர்தலுக்காக மட்டுமே தொடங்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் பாஜக பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன