வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (18:06 IST)

கேரளாவில் பரவும் மர்ம காய்ச்சல் : 100க்கும் மேற்பட்டோர் பலி

கேரளாவில் பரவும் மர்ம காய்ச்சலால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.


 

 
இந்தியாவில் அவ்வப்போது சில மாநிலங்களில் உள்ள மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. தமிழகத்தில் சிக்கன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் மரணமடைந்தனர். அதன் பின் அந்த நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில், கேரளாவின் தெற்கு பதிகளான திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், கோட்டயம், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.
 
இந்த மர்ம காய்ச்சலால் கேரளாவில் 100க்கும் மேற்பட்டோர் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விவகாரம், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.