Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தற்கொலை செய்து கொள்ளும் கோழையல்ல முத்துகிருஷ்ணன். தந்தை உருக்கமான பேட்டி

செவ்வாய், 14 மார்ச் 2017 (05:01 IST)

Widgets Magazine

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் படித்து வந்த சேலத்தை சேர்ந்த எம்.ஃபில் மாணவர் முத்துக்கிருஷ்ணன் நேற்று மாணவர் விடுதியில் திடீரென தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது. மாணவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பின்னரே மாணவனின் மரணம் குறித்த விவரங்கள் தெரியவரும்


 


இந்நிலையில் மகன் மறைவுச்செய்தி கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் நேற்று சேலத்தில் இருந்து டெல்லி சென்றனர். அதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் கூறியபோது, ' "முத்துகிருஷ்ணன் நேற்று மாலை வழக்கம் போல தொலைபேசியில் பேசினான். தற்கொலை செய்யும் அளவிற்கு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையும் கிடையாது' என்று கூறினார். எனவே முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டாரா? என்ற ரீதியில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதே அவரது மறைமுக கோரிக்கையாக உள்ளது.

மரணம் அடைந்த முத்துகிருஷ்ணனுக்கு திருமணமான மூத்த சகோதரி கலைவாணி மற்றும் பள்ளியில் படித்து வரும் தங்கைகள் ஜெயந்தி, சுதா ஆகியோர் உள்ளனர்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கச்சத்தீவுக்காக காசு வாங்கினர் கருணாநிதி. சுவாமியின் பகீர் குற்றச்சாட்டு

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற குரல் மீனவர்களிடம் இருந்து ...

news

அப்பல்லோ ரெட்டி மீது குற்ற வழக்கு. வழக்கறிஞர் புகாரால் பரபரப்பு

ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து மர்மம் இருந்து வருவதால் அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளித்த ...

news

டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை: என்ன நடந்தது?

டெல்லி ஜவஹர்லால் பல்கலையில் கடந்த ஆண்டு ரோஹித் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த ...

news

சசிகலா அணியில் உயிருள்ளவரை இருப்பேன்! செந்தில் பாலாஜி கூறுவதற்கு காரணம் வெயிட்டான கவனிப்பா?

சசிகலா அணியின் ஆதரவாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியும் அவரது ...

Widgets Magazine Widgets Magazine